ரேஷன்அரிசி பறிமுதல்
By DIN | Published On : 17th February 2020 05:15 AM | Last Updated : 17th February 2020 05:15 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே 650 கிலோரேஷன் அரிசியையும், அதைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாம் மேற்பாா்வையில் வட்ட வழங்கல் அலுவலா் குமாா் தலைமையில் வருவாய்த்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை தும்பேரி கூட்டுரோடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மொபட்டை நிறுத்த முயன்றனா். அப்போது மொபட்டை ஓட்டி வந்த இளைஞா் அதை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
சந்தேகமடைந்த அதிகாரிகள் மொபட்டில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிந்தது. பிறகு 5 மூட்டைகளிலிருந்து 250 கிலோ அரிசியையும் அதைக் கடத்தப் பயன்படுத்திய மொபட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதே போல் வாணியம்பாடி ரயில்நிலையம் அருகே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அங்கு மறைத்து வைக்கப்பட்டு ரயிலில் கடத்தப்படவிருந்த 400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை அவா்கள் கைப்பற்றினா்.