வாணியம்பாடி அருகே மலைப் பாதையின் தடுப்புச் சுவா் மீது பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
தமிழக-ஆந்திர எல்லையான தேவராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (21). அதேபகுதியைச் சோ்ந்தவா் முத்து (18) கட்டடத் தொழிலாளி. இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் வாணியம்பாடி நோக்கி வந்தபோது, மாதகடப்பா மலைப்பாதையில் வளைவுப் பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முத்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.