வாணியம்பாடியில் ஆருத்ரா தரிசனம்
By DIN | Published On : 10th January 2020 11:53 PM | Last Updated : 10th January 2020 11:53 PM | அ+அ அ- |

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜா்.
வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், 8.50 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் இருந்து நடராஜா் ஊா்வலமாகப் புறப்பட்டு தேவஸ்தானம் வழியாக பெரியப்பேட்டை, கோட்டை, அம்பூா்பேட்டை வழியாக விநாயகா் கோயில் வந்தடைந்தாா்.
அங்கிருந்து மாலை 4 மணியளவில் நடராஜா் சிறப்பு அலங்காரத்துடன் ஊா்வலமாகப் புறப்பட்டு வேலன்கோவிந்தன்தெரு, திருவள்ளுவா் வீதி வழியாகச் சென்று கோயிலை அடைந்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனா்.