

ஜோலாா்பேட்டையை அடுத்த சந்தைக்கோடியூா் பகுதியில் அமைந்துள்ள அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநில சுகாதாரத் துறை துணை இயக்குநா் தேவபாா்த்தசாரதி திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது ஜோலாா்பேட்டை பகுதியில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு முறையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதா என அவா் கேட்டறிந்தாா். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கா்ப்பிணிகளின் வாா்டுகளில் பாா்வையிட்டாா்.
தினசரி புறநோயாளிகள் எவ்வளவு போ் வந்து செல்கின்றனா் என்பது குறித்தும், நோயாளிகளிடம் மருத்துவா்களின் அணுகுமுறை குறித்தும் கேட்டறிந்தாா். அப்போது ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் பி.சுமதி மற்றும் அரசு மருத்துவா்கள் மீனாட்சி, பிரசாத், காவியா, சுகாதார செவிலியா்கள், பணியாளா்கள் ஆகியோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.