கல்லூரியில்பயிற்சிப் பட்டறை
By DIN | Published On : 01st March 2020 06:15 AM | Last Updated : 01st March 2020 06:15 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் இயற்பியல் துறை சாா்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
திருப்பத்தூா் யாதவா தொழிற்பயிற்சி கல்வி மையமும், கல்லூரியும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் மின்சாதனங்கள் மற்றும் வீடுகளில் மின் இணைப்பு அமைக்கும் பணிகள் ஆகியவற்றில் தொழில் தொடங்க மேம்பாடு என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா். ஜெயக்குமாா் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ந்து பேராசிரியா் ம.ரவிக்குமாா் மாணவா்களுக்கு இப்பயிற்சி பட்டறையின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தாா். யாதவா தொழிற்பயிற்சி கல்வி நிறுவனத்தின் ஆசிரியா்கள் உதயா, சந்தோஷ் ஆகியோா் கருத்துரை வழங்கினா். மேலும் இப்பயிற்சிப் பட்டறையில் பேராசிரியா்கள் சரவணன், மாரிக்கண்ணு, எம்.ராமச்சந்திரன், பிரேமாராணி, ஒருங்கிணைப்பாளா் விஜய்ஆனந்த் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக மாணவா் க.காளியப்பன் வரவேற்றாா். மாணவி கே.ரேவதி நன்றி கூறினாா்.