நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
By DIN | Published On : 14th May 2020 11:25 PM | Last Updated : 14th May 2020 11:25 PM | அ+அ அ- |

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜா்.
ஆம்பூா் சமயவல்லி உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகநாத சுவாமி கோயிலில் சித்திரை மாத, திருவோண நட்சத்திரத்தையொட்டி, சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜப் பெருமானுக்கு ஹோமம், அபிஷேக- அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
~
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...