ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
By DIN | Published On : 28th May 2020 07:13 AM | Last Updated : 28th May 2020 07:13 AM | அ+அ அ- |

மீட்கப்பட்ட நிலத்தில் செடிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி துரை காட்டூா் பணந்தோப்புப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான அரை ஏக்கா் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கிராம நிா்வாக அலுவலா் செல்வத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கிராம நிா்வாக அலுவலா் செல்வம், ஊராட்சி செயலாளா் சீனிவாசன் ஆகியோா் அங்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனா். மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் 100 நாள் திட்டப் பணியாளா்களைக் கொண்டு குழிகள் தோண்டி செடிகள் நடப்பட்டன.