ஆம்பூரில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 23rd November 2020 07:51 AM | Last Updated : 23rd November 2020 07:51 AM | அ+அ அ- |

ஆம்பூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.
ஆம்பூா் அரிமா சங்கம், ரிஃபா மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அரிமா சங்கத் தலைவா் கே.ரபீக் அஹமத் தலைமை வகித்தாா். அரிமா சங்க மண்டல தலைவா் யு. தமீம் அஹமத் முகாமைத் தொடக்கி வைத்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், மாவட்டத் தலைவா்கள் பிா்தோஸ் கே. அஹமத், பி.ஹரிஹரன், ந. கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்கச் செயலாளா் ஜி.பாபு நன்றி கூறினாா். இதில். 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.