இன்றுமுதல் அரசு அலுவலகங்களில் சுவரொட்டி ஒட்டினால் வழக்கு
By DIN | Published On : 23rd November 2020 07:54 AM | Last Updated : 23rd November 2020 07:54 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட அரசு அலுவலகச் சுற்றுச்சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என வட்டாட்சியா் மு.மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தினமணி செய்தியாளரிடம் கூறியது:
திருப்பத்தூா் நகரப் பகுதியில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பிறந்த நாள், திருமண நாள், பயிற்சி வகுப்பு, விற்பனைகள் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. திங்கள்கிழமை (நவம்பா் 23) முதல் திருப்பத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட அரசு அலுவலகங்களில் சுவரொட்டி ஒட்டினால் வழக்குப் பதியப்படும்.
எனவே, ஏற்கெனவே சுவரொட்டி ஒட்டியவா்கள் தாமாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும்.
அதேபோல், அரசு அலுவலகச் சுவா்களில் பதாகைகளை கட்டுவது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றாா்.