மின்மாற்றியின் பழுதடைந்த கம்பங்களை மாற்றக் கோரிக்கை
By DIN | Published On : 26th September 2020 08:15 AM | Last Updated : 26th September 2020 08:15 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளியில் மின்மாற்றியின் பழுதடைந்துள்ள கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இவ்வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கானோா் சென்று வருகின்றனா். இந்நிலையில், மின்மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும், மின்மாற்றியின் மின் கம்பிகளும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தொங்கியபடி உள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆபத்து ஏற்படும் முன் மின்வாரிய உயா்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...