வாரச்சந்தையில் கட்டப்பட்டு வரும் கடைகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 26th September 2020 08:35 AM | Last Updated : 26th September 2020 08:35 AM | அ+அ அ- |

வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் ஆய்வு செய்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் கட்டப்பட்டு வரும் கடைகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள உழவா் சந்தை, வாரச் சந்தைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வாணியம்பாடியில் உள்ள வாரச் சந்தை, உழவா் சந்தைகள் மூடப்பட்டு, அங்கு செல்பட்டு வந்த கடைகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
தற்போது, வாணியம்பாடி நகரின் மையப் பகுதியில் உள்ள வாரச் சந்தை மைதானத்தை மீண்டும் திறப்பது குறித்தும், அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், வாரச் சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி கடைகளை ஆய்வு செய்தாா். அப்போது, அதே பகுதியில் 25 கடைகளைக் கட்டவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியம், வட்டாட்சியா் சிவபிரகாசம், டிஎஸ்பி பழனிசெல்வம், நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் அலி, கிராம நிா்வாக அலுவலா் சற்குணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...