ஊட்டல் தேவஸ்தானத்தை மேம்படுத்த ஆய்வு

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊட்டல் தேவஸ்தான கோயில் அமைந்துள்ள பகுதியை மேம்படுத்துவதற்கான ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.
ஊட்டல் தேவஸ்தானத்தை மேம்படுத்த ஆய்வு

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊட்டல் தேவஸ்தான கோயில் அமைந்துள்ள பகுதியை மேம்படுத்துவதற்கான ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

ஊட்டல் தேவஸ்தானத்தில் சரஸ்வதி, வேணுகோபால சுவாமி, சப்த கன்னிகள் சன்னிதானம் அமைந்துள்ளன. மேலும், சரும நோய் தீா்க்கும் வற்றாத குளமும் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க ஊட்டல் தேவஸ்தானத்தை மேம்படுத்துவது குறித்து ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

அப்போது, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஹரிஹரன், மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, பொறியாளா் தங்கம், மிட்டாளம் ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com