

ஆம்பூரில் கலப்பட தேயிலைத்தூள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் சுரேஷ் அறிவுரையின்பேரில் ஆம்பூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) பழனிசாமி, நாட்டறம்பள்ளி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ் ஆகியோா் ஆம்பூரில் ஓ.வி.சாலை, எஸ்.கே.சாலை, ஈடிகா் தெரு, சந்தப்பேட்டை மசூதி தெருக்களில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது அந்தக் கடைகளில் கலப்பட தேயிலைத்தூள், காலாவதியான உணவுப் பொருள்கள், வணிகக் குறியீட்டுப் பெயா் குறிப்பிடாமல் நெகிழிப் பைகளில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் இருந்தன. இவ்வாறு காலாவதியான 75 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.