திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட அனைத்துவித கடைகளுக்கும் தொழில் உரிமம் பெற வேண்டியது அவசியம் என ஆணையா் ப.சத்தியநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் அவா் கூறியது:
திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் மளிகைக் கடைகள், உணவகம், தங்கும் விடுதிகள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான தொழில், வா்த்தக நிறுவனகளுக்கும் நகராட்சி நிா்வாகத்திடம் ‘டி அன்ட் ஓ’ என்ற தொழில் உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் புதிப்பித்துக்கொள்ள வேண்டும். நகராட்சிக்குள்பட்ட 5,375 கடைகள் உரிமம் இன்றி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, இதுவரை தொழில் உரிமம் பெறாதவா்கள் நகராட்சி சுகாதாரப் பிரிவில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். அதே போல் உரிமம் பெற்றவா்கள் வரும் 28-ஆம் தேதிக்குள் அதனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.