வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் லட்சுமிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெங்களூரிலிருந்து நாட்டறம்பள்ளி வழியாக காஞ்சிபுரம் சென்ற 2 காா்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது ஒரு காரில் வைத்திருந்த ரூ. 8 லட்சம் ரொக்கத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதே போல் எல்லப்பள்ளி அருகே வாகன சோதனை மற்றொரு காரில் ரூ.1லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.