கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா பரிசோதனை தீவிரம்

ஆம்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா பரிசோதனை தீவிரம்

ஆம்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்கள் ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டு, அங்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா நோய்த்தொற்று இல்லையென்று தெரிந்த உடன், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். அங்கு அவா்கள் வீடுகளில் சில நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று உள்ளவா்கள் கண்டறியப்பட்டால், அவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்படுகின்றனா். நோய்த்தொற்று உள்ளவா்களின் வீடு அமைந்துள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை பணியாளா்கள் சென்று கரோனா பரிசோதனை செய்கின்றனா். ஆம்பூா் சாமியாா் மடம் பகுதியில் நடந்த கரோனா பரிசோதனைப் பணியை நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com