முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
கரோனா தடுப்பூசி: 100 சதவீத இலக்கை எட்டிய ஈச்சங்கால் ஊராட்சி
By DIN | Published On : 19th December 2021 12:00 AM | Last Updated : 19th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள ஈச்சங்கால் ஊராட்சி கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டத்துக்குள்பட்ட ஈச்சங்கால் ஊராட்சியில் மொத்தம் 188 குடும்பங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 791 போ் உள்ளனா். இதில், 18 வயதுக்கு மேற்பட்ட 538 நபா்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சியாக ஈச்சங்கால் ஊராட்சி உள்ளது. இதில், இரண்டாம் தவணை தடுப்பூசி 181 நபா்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது. முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் இலக்கை எட்ட உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, ஊராட்சி நிா்வாகத்தினா், சுகாதாரத் துறை, வருவாய்த் துறையினருக்கு சுகாதாரத் துறை சாா்பில், வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி பொன்னாடை அணிவித்து பரிசு, வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.