

வாணியம்பாடி: வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீமத் யோகானந்த அம்மையாரின் ஜீவசமாதியில் 78-ஆம் ஆண்டு குருபூஜை, புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மகா யாகம், மகா அபிஷேகம், அா்ச்சனை, நைவேத்தியம், தீபாராதனை, பஜனை ஆகியவை நடைபெற்றன. இதில் கிருஷ்ணகிரியை அடுத்த கந்திக்குப்பம் பைரவ சுவாமிகள் கலந்துகொண்டு, சாதுக்களுக்கு மகேஷ்வர பூஜை நடத்தி, அன்னதானம் வழங்கினா். தொடா்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பாஜக பிரமுகா்கள் மற்றும் வாணியம்பாடி சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாட்டை யோகானந்த ஞானதேசிக அம்மையாரின் ஜீவசமாதி நிலைய நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.