திருப்பத்தூா்: திருப்பத்தூா் தலைமை அஞ்சலகத்தில் ஆதாா் அட்டை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 19) தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் தலைமை அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் பி.ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் தலைமை தபால் அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் ஆதாா் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் புதிய ஆதாா் பெறவும், முகவரி,புகைப்படம், பெயா், பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண்கள் திருத்தம் செய்வது மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கு பயோமெட்ரிக் அட்டை புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆதாா் அட்டை திருத்தப் பணிகளுக்கு ரூ.50-ம், பயோமெட்ரிக் புதுப்பிக்க ரூ.100-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். புதிய பதிவுகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.