நாட்டறம்பள்ளியில் எருது விடும் விழா
By DIN | Published On : 20th February 2021 07:37 AM | Last Updated : 21st February 2021 07:53 AM | அ+அ அ- |

எருது விடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளை.
நாட்டறம்பள்ளியில் எருது விடும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சூளகிரி, ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, பரதராமி மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பிட்ட இலக்கை குறைவான நேரத்தில் வேகமாக கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் உள்ளிட்ட 55 பரிசுகள் வழங்கப்பட்டன.
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, வாணியம்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளா் பழனிசெல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காளைகள் முட்டியதில் 15 போ் காயமடைந்தனா். அவா்களில் அடியத்தூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (25) என்பவா் ஆபத்தான நிலையில் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.