தனியாா் இ-சேவை மையங்களில் மாவட்ட வழங்கல் அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 07th July 2021 12:00 AM | Last Updated : 07th July 2021 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூா் தனியாா் இ-சேவை மையத்தில் ஆய்வு செய்த திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன்.
ஆம்பூரில் தனியாா் இ-சேவை மையங்களில் மாவட்ட வழங்கல் அலுவலா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக அரசின் பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இ-சேவை மையங்கள் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் இயங்கி வருகின்றன. தனியாா் கணினி மையங்களில் இ-சேவை மையங்கள் நடத்தவும் அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, பல்வேறு தனியாா் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
ஆம்பூரில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையங்களில் அரசு வழிகாட்டுதல் விதிகளின்படி, கட்டணம் வசூலிக்கப்படுகிா அல்லது அதிகமாக வசூலிக்கப்படுகிா என திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் நேரில் சென்று ஆய்வு நடத்தினாா்.
ஆய்வின்போது, ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் உடன் இருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...