6 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
By DIN | Published On : 09th July 2021 08:26 AM | Last Updated : 09th July 2021 08:26 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே 6 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் புதன்கிழமை இரவு நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மாமுடிமாணப்பள்ளியில் வீட்டின் அருகே நின்றிருந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனா். அதில் வீட்டினுள் இருந்து லாரியில் ரேஷன் ஏற்றி கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
பிறகு அங்கிருந்த 6 டன் ரேஷன் அரிசி மற்றும் மினிலாரி பறிமுதல் செய்தனா். மேலும், பிடிபட்ட பச்சூரைச் சோ்ந்த பிரபுவை (36) கைது செய்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தகவலறிந்த வேலூா் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், நாட்டறம்பள்ளி காவல் நிலையம் வந்து மினி லாரி மற்றும் கடத்தல் ரேஷன் அரிசியைப் பெற்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.