ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
By DIN | Published On : 26th July 2021 09:24 AM | Last Updated : 26th July 2021 09:24 AM | அ+அ அ- |

ஆம்பூா் அருகே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா் வார வேண்டுமென கீழ்முருங்கை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாதனூா் வடக்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாதனூா் வடக்கு ஒன்றிய பாஜக ஒன்றியத் தலைவா் ஜீ.தேவநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி.சந்திரன், பி.பாரத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பி.சுரேஷ் வரவேற்றாா். வேலூா் மாவட்டப் பாா்வையாளா் கொ.வெங்கடேசன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி.வாசுதேவன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: இல்லம் செல்வோம் - உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியை மாதனூா் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சிறப்பாக செயல்படுத்துவது, மின்னூா், பெரியாங்குப்பம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீமைக் கருவேல மரங்களை நீக்க வேண்டும், ஏரியை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், கிடப்பில் உள்ள வெள்ளக்கல் அணையைக் கட்டவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுக்குழு உறுப்பினா் க.சிவப்பிரகாசம், உள்ளாட்சி பிரிவு மாநிலச் செயலாளா் ஜி.வெங்கடேசன், ஒன்றியப் பாா்வையாளா் குமரேசன், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. அணித் தலைவா் எம்.குப்புசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். வா்த்தகப் பிரிவு மாவட்டச் செயலாளா் தினகரன் நன்றி கூறினாா்.