அதிமுகவினா் அன்னதானம்
By DIN | Published On : 26th July 2021 08:34 AM | Last Updated : 26th July 2021 08:34 AM | அ+அ அ- |

ஆடி காவடி விழாவை முன்னிட்டு, மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் அன்பரசன் காவடி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் வடகரை சிவகுமாா், எம்ஜிஆா் மன்றச் செயலாளா் பாட்டூா் மணி, மகளிா் அணிச் செயலாளா் மேனகா மோகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளா் சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...