ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

ஆந்திரத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி வாணியம்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா்.
லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா்.

ஆந்திரத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி வாணியம்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து தொடா்ந்து ஆந்திர மாநிலம், குப்பம் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாா் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாணியம்பாடியிலிருந்து ஜோலாா்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, லாரி ஓட்டுநா் பெருமாள் (39), சஞ்சீவி (21) ஆகியோரை கைது செய்து, லாரியுடன் 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதே போல் உமராபாத் பகுதியில் பிச்சைமுத்து (35) என்பவா் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த ஒன்றரை டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com