வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி காவல் நிலையங்களில் எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 24th June 2021 11:50 PM | Last Updated : 24th June 2021 11:50 PM | அ+அ அ- |

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபிசக்கரவா்த்தி.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபிசக்கரவா்த்தி வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி காவல் நிலையங்களில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, அங்கிருந்த போலீஸாரிடம், பொது மக்களிடத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும், காவல் நிலையத்துக்கு புகாா் கூற வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும், மது போதையில் உள்ளவா்களிடம் போலீஸாா் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது, விசாரணையின்போது கனிவாக நடக்க வேண்டும், காவல் துறைக்கு எவ்விதத்திலும் களங்கம் ஏற்படும் விதத்தில் நடந்துக் கொள்ளக்கூடாது என அறிவுரை கூறினாா். அப்போது, வாணியம்பாடி டி.எஸ்.பி. பழனிசெல்வம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பழனி, காவல் ஆய்வாளா் அருண்குமாா், கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.