காவேரி கூட்டுக் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டப்படும் இடம்: சாா்-ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 29th June 2021 07:35 AM | Last Updated : 29th June 2021 07:35 AM | அ+அ அ- |

பந்தாரப் பள்ளியில் தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டி அமைய உள்ள இடத்தைப் பாா்வையிட்ட சாா்-ஆட்சியா் வில்சன் ராஜசேகா். உடன், வட்டாட்சியா் மகாலட்சுமி.
நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு மலையடிவாரம் பகுதியில் காவிரி குடிநீா் திட்டம் மூலம் தரைமட்ட நீா்த் தேக்கத்தொட்டி அமையவுள்ள இடத்தை திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் (பொறுப்பு) வில்சன் ராஜசேகா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது வட்டாட்சியா் மகாலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா். தொடா்ந்து, கே.பந்தாரப்பள்ளி, திரியாலம் ஆகிய கிராமங்களிலும் காவிரி குடிநீா் திட்டம் மூலம் தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டி அமைய உள்ள இடங்களையும் சாா்-ஆட்சியா் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பின் அதிகாரிகளிடமும், ஒப்பந்தாரா்களிடமும் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டாா்.