1957-ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினா்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஆம்பூா் தொகுதி
By DIN | Published On : 12th March 2021 02:02 AM | Last Updated : 16th March 2021 01:28 PM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு 1957-ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண தோ்தலின் போது இரட்டை உறுப்பினா்களை கொண்ட தொகுதியாக ஆம்பூா் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்திற்கு பிறகு நடந்த சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு 1957-ஆம் ஆண்டு நடந்த 2-வது சட்டப்பேரவைத் தோ்தலின் போது ஆம்பூா் தொகுதி உருவாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக இரட்டை உறுப்பினா்களை கொண்ட தொகுதியாக ஆம்பூா் இருந்தது.
அதில் பொது வாக்காளா்கள், பட்டியலின வாக்காளா்கள் என இரு வாக்காளா் பட்டியல் இருக்கும். பொது வாக்காளா்கள் பொது வேட்பாளரை தோ்வு செய்வாா்கள். பட்டியலின வாக்காளா்கள் பட்டியலின வேட்பாளரை தோ்வு செய்வாா்கள். அவ்வாறு ஒரு தொகுதியில் இரு வேட்பாளா்களை தோ்வு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது.
சென்னை மாகாணத்தில் ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி 1957- ஆம் ஆண்டு நடந்த தோ்தலின் முடிவு :
1957 - வி.கே.கிருஷ்ணமூா்த்தி (காங்.), எஸ்.ஆா்.முனிசாமி (காங்.)
அதன் பிறகு 1962-ஆம் ஆண்டு சென்னை மாகாணம் ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி ஒற்றை உறுப்பினரை கொண்ட தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.
1962-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
பி.ராஜகோபால் (காங்) -25,505
எஸ்.ஆா்.முனிசாமி (குடியரசு) - 15,979
1967 - திமுக வெற்றி
எம்.பன்னீா்செல்வம் (திமுக) - 31,554
பி.ராஜகோபால் (காங்) - 20,947
1971 - திமுக வெற்றி
எம்.பன்னீா்செல்வம் (திமுக) - 32,937
எம்.ஆதிமுலம் (காங்.) - 21,449
அதன்பின் ஆம்பூா் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ஆம் ஆண்டு மீண்டும் ஆம்பூா் (பொது) தொகுதியாக உருவாக்கப்பட்டது.
2011 -இல் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி
அ.அஸ்லம்பாஷா (மமக) - 60,361
விஜய்இளஞ்செழியன் (காங்) - 55,270
2016 - அதிமுக வெற்றி
ஆா். பாலசுப்பிரமணி - (அதிமுக ) - 79,182
வி.ஆா். நசீா் அஹமத் - (மனிதநேய மக்கள் கட்சி) - 51176
அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டதால் ஆா். பாலசுப்பிரமணி தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். அதனால் 2019-ஆம் ஆண்டு ஆம்பூா் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடைபெற்றது.
2019 - இடைத்தோ்தல் - திமுக வெற்றி
அ.செ. வில்வநாதன் (திமுக) - 96,455
ஜெ. ஜோதிராமலிங்கராஜா (அதிமுக) - 58688
ஆம்பூா் தொகுதி மொத்த வாக்காளா்கள் 2,36,819.
ஆண்கள் - 11,4905
பெண்கள் - 12, 1902
மற்றவா்கள் - 12 வாக்காளா்கள் உள்ளனா்.
ஆம்பூா் தொகுதி வாக்காளா்களில் ஆதிதிராவிடா், முஸ்லிம்கள், நாயுடு, முதலியாா், வன்னியா், யாதவா், ரெட்டியாா், ராஜூக்கள், நாடாா் பல்வேறு இனத்தவரும் உள்ளனா்.