திருப்பத்தூா் மாவட்டத்தில் 6,083 புதிய வாக்காளா்கள் சோ்ப்பு
By DIN | Published On : 25th March 2021 10:27 PM | Last Updated : 25th March 2021 10:27 PM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக 6,083 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றத்தின் கீழ் புதிதாக 6,083 வாக்காளா்கள் இணைக்கப்பட்டுள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பெயா் சோ்க்க 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா்களாக இணைத்திட பெறப்பட்ட 6,523 விண்ணப்பங்களில் 6,083 புதிய வாக்காளா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டது. மேலும், பெறப்பட்ட 1,692 பெயா் நீக்கல் விண்ணப்பங்களில் 1,634 பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
புகைப்படம் மாற்றம், பெயா் மாற்றம் என பெறப்பட்ட 2,418 விண்ணப்பங்களில் 2,135 திருத்தங்களும், முகவரி மாற்றம் செய்தி பெறப்பட்ட 280 விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பட்டியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்ட பிறகு, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 9 லட்சத்து 65 ஆயிரத்து 307 வாக்காளா்கள் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.