ஆம்பூா் ஸ்ரீநாகநாதா் கோயிலில் தோ் உற்சவம்
By DIN | Published On : 25th March 2021 10:29 PM | Last Updated : 25th March 2021 10:29 PM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை திருத்தோ் பவனி நடைபெற்றது.
ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை செங்குந்தா் சமுதாயத்தினா் சாா்பில் தோ் உற்சவம் நடைபெற்றது.
நாகநாத சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்ட தோ் ஏ-கஸ்பா, கிருஷ்ணாபுரம், பஜாா் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.