பொதுமக்களின் மனுக்களை வசிக்கும் பகுதியிலேயே பெற்றிட மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும்: சமூகஆர்வலர்கள்
By DIN | Published On : 09th May 2021 09:26 PM | Last Updated : 09th May 2021 09:26 PM | அ+அ அ- |

பொதுமுடக்கத்தையொட்டி பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலேயே கோரிக்கை மனுக்களை அரசு அதிகாரிகள் பெற்றிட மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின்போது கரோனா பரவல் தடுப்பையொட்டி பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வருவததை தவிர்க்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுதும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த பகுதியில் வசிக்கும் கிராம நி்ர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி செயலாளர்கள் மூலம் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், அவசர, அவசிய தேவைக்கான மனுக்கள் மீது உடனடி கவனம் செலுத்தி நவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை முதியவர்கள், பெண்கள், நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது குறிப்பிடதக்கது.
தற்போது திங்கள்கிழமை(மே.10) முதல் 15 நாள்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது 2-ஆம் அலையான கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வருவதை தவிர்க்க கடந்த ஆண்டு உத்தரவிட்டதைபோல் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த பகுதியில் வசிக்கும் கிராம நி்ர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி செயலாளர்களே பெற செய்து, அதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.