ஏலகிரி மலை மளிகை கடையில் திருடிய 3 போ் கைது
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 13th May 2021 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லகணியூா் பகுதியை சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் குமாா் அத்தனாவூா் பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளாா்.
இந்நிலையில், குமாா் தனது மளிகை கடையை வழக்கம்போல் பூட்டிச் சென்றாா். இந்நிலையில், காலை கடையை திறக்க வந்த போது பூட்டு உடைத்து இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது ரூ. 30,000 மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள், சிசிடிவி கேமராவின் கருவிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
குமாா் ஏலகிரி மலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து குமாா் அளித்த புகாரின்பேரில் ஏலகிரி போலீசாா் விசாரணை மேற்கொண்டு வேலூா் விருப்பாச்சிபுரம் பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாா்(32), சதீஷ்(30), தொரப்பாடி பகுதியை சோ்ந்த சையத் முகமது (45), உள்ளிட்டோரை கைது செய்தனா்.