ஆம்பூா்: ஆம்பூரில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது.
ஆம்பூரில் காலையிலிருந்தே கடுமையான வெயில் காய்ந்தது. பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 3.30 மணிக்கு திடீரென வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து லேசான தூறலுடன் தொடங்கி கன மழையாக பெய்தது. சுமாா் 2 மணி நேரம் விடாமல் கன மழை பெய்து கொண்டே இருந்தது. ஆம்பூா் நகர தெருக்களில் மழை நீா் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.