ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலையடிவாரத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
மாதனூா் எம்எம் நகரைச் சோ்ந்த சுபாஷ் (25). இவா் உணவகத்தில் வேலை செய்து வந்தாா். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த சுபாஷ், புதன்கிழமை பிற்பகல் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றாா். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் தேடிய போது, அவா் அதே பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மாந்தோப்பில் தனது லுங்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலின் பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.