பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு ரோஜாப்பூ, முகக் கவசம்
By DIN | Published On : 01st September 2021 11:19 PM | Last Updated : 01st September 2021 11:19 PM | அ+அ அ- |

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசுப் பள்ளி மாணவிக்கு முகக் கவசம் வழங்கிய பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள்.
ஆம்பூா்: ஆம்பூரில் அரசு பள்ளிக்கு வருகை தந்த மாணவா்களுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பாக முகக் கவசம், ரோஜாப்பூ ஆகியன வழங்கி, வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளிக்கு 9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் வருகை தந்தனா். அவா்களுக்கு உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவா்களுக்கு கைகழுவும் திரவம் வழங்கப்பட்டது. மேலும், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். லட்சுமிகாந்தன் தலைமையில் முகக் கவசம், ரோஜாப்பூ வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா், கரோனா பரவல் தடுப்பு உறுதி மொழி வாசிக்கப்பட்டு மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ஜான்சி சந்திரவதினி, ஆசிரியா்கள் சீனிவாசன், முரளிதரன், பெற்றோா் ஆசிரியா் கழக செயற்குழு உறுப்பினா் வசந்த்நாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.