விபத்தில் இளைஞா் பலி
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

காா்த்திக்.
கந்திலி அருகே ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கந்திலியை அடுத்த மைக்காமேடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக்(20). இவா் செவ்வாய்க்கிழமை தனது உறவுக்கார பெண் சத்தியவாணியுடன் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
புங்கனூா் இணைப்புச் சாலையில் எதிரே வந்த காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், பலத்த காயம் அடைந்த காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயம் அடைந்த சத்தியவாணி, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா்.