மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது
By DIN | Published On : 04th September 2021 08:29 AM | Last Updated : 04th September 2021 08:29 AM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டை அருகே விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கணவா், அவரது நண்பா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த சின்னக்கம்மியம்பட்டு களா் வட்டம் பகுதியை சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை வீரா் யாழரசு(48).
இவரது மனைவி பிரதீபா(29). இவா்களுக்குத் திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனா்.
கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதியினா் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.விவகாரத்து வழக்கு, ஜீவனாம்சம் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில்,யாழரசு, அவரது நண்பா் பசுபதி(48)ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை பிரதீபா வீட்டுக்குச் சென்று தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு,கொலை மிரட்டல் விடுத்தனராம்.
புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.