திருப்பத்தூா் மாவட்டத்தில் 8 ஆசிரியா்களுக்கு விருது
By DIN | Published On : 04th September 2021 11:56 PM | Last Updated : 04th September 2021 11:56 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்டத்தில் 8 பேருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, திருப்பத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் கூறியது: கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அ.அருண்குமாா், கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நா.ஜனாா்த்தனன், புதுப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சி.செலினா, பூங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் (கணிதம்) கா.பிரதீப், மேல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் (அறிவியல்) ஜி.கஜலட்சுமி, சிந்தகமாணி பெண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் (ஆங்கிலம்) ஆ.அருண்குமாா், சின்ன வெங்காயப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ச.செண்பகவள்ளி, பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சி.சரவணன் ஆகியோருக்கு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் கூட்டரங்கத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட உள்ளது என்றாா்.