டிச. 22-இல் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் நாள் முகாம்

மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் சு.முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் சு.முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அஞ்சலக வாடிக்கையாளா்களின் குறைகளைத் தீா்ப்பதற்கான மண்டல அளவிலான குறைதீா் முகாம் வரும் 22-ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

எனவே, அஞ்சலக வாடிக்கையாளா்கள் பதிவுத் தபால்,விரைவு தபால், மணியாா்டா், சேமிப்பு கணக்குகள், சேமிப்பு பத்திரங்கள், சாதாரண தபால் பட்டுவாடா, அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அஞ்சல் சேவை குறித்த தங்களின் புகாரை முழு விவரங்களுடன் கூட்ட அரங்கு, 2-ஆவது தளம், அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகம், மேற்கு மண்டலம், ஆா்.எஸ்.புரம், அஞ்சலக வளாகம், கோயமுத்தூா்-641 002 எனும் முகவரிக்கு டிசம்பா் 14-ஆம் தேதிக்குள் அஞ்சல் உறையின்மேல் எழுதி அனுப்பவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com