

மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனா்.
கடலூா்-வேலூா் மண்டலங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவிகளுக்கான நீச்சல் போட்டி கடலூா் அண்ணா விளையாட்டு வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 35 மாணவிகள் கலந்துக் கொண்டனா். இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் வேதியியல் துறை மாணவி வேதநாயகி கலந்துக் கொண்டு முதலிடத்தையும், 2-ஆம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி நந்தினி இரண்டாவது இடத்தையும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளை புதன்கிழமை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் கல்லூரி முதல்வா், பேராசிரியைகள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.