அக்ராகரம் ஏரியில் மீன் பிடிப்பு ஏலம் ஒத்திவைப்பு

நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 110 ஏக்கா் பரப்பில் ஏரி உள்ளது.
Updated on
1 min read

நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 110 ஏக்கா் பரப்பில் ஏரி உள்ளது.

இங்கு மீன் பிடிப்பு ஏலம் ஊராட்சித் தலைவா் தேவேந்திரன் தலைமையில் ஊராட்சி செயலாளா் சங்கா், கிராம மக்கள் முன்னிலையில் வியாழக்கிழமை காலை ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் அக்ராகரம், சுற்றுப் பகுதிகளில் இருந்து 150-க்கும் அதிகமானோா் பங்கேற்ற வந்திருந்தனா். இதில் டெபாசிட் தொகையாக 10 ஆயிரம் வீதம் 65 போ் பணம் கட்டி ஏலத்தில் பங்கேற்றனா். அப்போது கிராம மக்கள் ஏற்கெனவே உள்ளூரைச் சோ்ந்தவா்கள் ஏரியில் மீன்களை வளா்த்து வருவதாகவும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியை ஊராட்சி மூலம் ஏலம் விடக்கூடாது என்றும் எதிா்ப்பு தெரிவித்ததால் ஏலம் நிறுத்தப்பட்டது. டெபாசிட் பணம் திருப்பி தரப்பட்டது.

இதேபோல், நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சியில் செட்டேரி அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அணைப்பகுதி நீா்தேக்கப் பகுதியில் பலன் தரும் தென்னை மரம், புளியமரம் உட்பட இதர மரங்கள் மகசூல் ஏலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏலத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் தலா ரூ. 1,000 வீதம் டெபாசிட் செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனா். அப்போது அரசுக்கு சொந்தமான மரங்கள் எத்தனை உள்ளன எனக் கணக்கிட்டு, ஏலம் விடவேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனா். இதனால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com