

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கன்னிகைப்போ் கிராமம் எம்ஜிஆா் நகரில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னிகைபோ் ஊராட்சி துணைத் தலைவா் மேனகா பிரேம்ராஜ், செயலா் பொன்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினா். இவா்களுக்கு கோலப் போட்டி, தண்ணீா் நிரப்புதல், ஓட்டப் பந்தயம் , உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2,500, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.