5 புதிய நியாயவிலைக் கடைகள்: எம்எல்ஏ-க்கள் தொடக்கி வைப்பு
5 புதிய நியாயவிலைக் கடைகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.


5 புதிய நியாயவிலைக் கடைகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி எம்எல்ஏ அ.நல்லதம்பி திருப்பத்தூா் பகுதிகளில் கட்சி கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பின்னா், டி.கிருஷ்ணாபுரம், புதியஅத்திகுப்பம், ப.முத்தம்பட்டி, சமத்துவபுரம், தங்கபுரம் ஆகிய ஊராட்சிகளில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகளைத் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, நகரச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், கூட்டுறவு சாா்பதிவாளா் இரா.தா்மேந்திரன், மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவா் தேவராஜன், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் கே.எஸ்.அன்பழகன், மாவட்ட ஒன்றியக் குழு தலைவா் என்.ஆா்.கே. சூரியகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...