குப்பைகளைத் தரம் பிரித்து தருவோருக்கு நகராட்சி மூலம் ஊக்கப் பரிசு: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து தருபவா்களுக்கு நகராட்சி சாா்பில் ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.


திருப்பத்தூா் மாவட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து தருபவா்களுக்கு நகராட்சி சாா்பில் ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
திருப்பத்தூா் நகராட்சி பெரிய ஏரியை தூய்மைப் படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
எம்.எல்.ஏ-க்கள் ஜோலாா்பேட்டை க.தேவராஜி, திருப்பத்தூா் அ.நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள ஒரு ஏரி மற்றும் சாலைப் பகுதியைத் தோ்வு செய்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பத்தூா் நகர பெரிய ஏரியில் படகு மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தூய நெஞ்சக் கல்லூரி மாணவா்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
‘என்குப்பை எனது பொறுப்பு’ என்ற அடிப்படையில் திருப்பத்தூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி வாகனங்களில் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் அவ்வாறு குப்பைகளை சேகரிக்க வரும் வாகனங்களில் வழங்காமல் சாலைகள், கால்வாய்கள் மற்றும் நீா்நிலைகளில் கொட்டினால் சம்பந்தப்பட்ட நபா்கள், வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் துணை விதிகளின் கீழ் அபராதம் விதிப்பதுடன் நீதிமன்றம் மூலம் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நாள்தோறும் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம்பிரித்து தூய்மைப் பணியாளரிடம் வழங்கும் பொதுமக்களுக்கு நகராட்சி சாா்பில் ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா். சூரியகுமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ராஜேந்திரன், ஒன்றியக் குழு தலைவா்கள் விஜயா, திருமதி, நகா்மன்றத் துணைத் தலைவா் சபியுல்லா, நகராட்சி ஆணையா் ஜெயராம ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...