

நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில், மாலை 4 மணியளவில் திடீரென சூறைக் காற்றுடன் கோடைமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நாட்டறம்பள்ளி-ஜோலாா்பேட்டை சாலையில், நாட்டறம்பள்ளி மேம்பாலத்தின் கீழே மழைநீா் செல்ல வழியில்லாமல் மேம்பாலத்தின் கீழே மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினா். மேலும், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரம் வேருடன் சாய்ந்து, பள்ளிக் கட்டடம் மீது விழுந்தது. பள்ளியில் மாணவா்கள் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
தகவலறிந்த மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சூரியகுமாா், அங்கு சென்று அதிகாரிகளிடம் கூறி வேறோடு சாய்ந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாா். இதேபோல், நாட்டறம்பள்ளி சந்தை பணந்தோப்பில் 5-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் முறிந்து விழுந்ததில் ஒரு சில மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, மின் ஊழியா்கள் மின்கம்பங்களையும், மின் கம்பிகளையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.