திருப்பத்தூரில் இலக்கிய, புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

திருப்பத்தூரில் சனிக்கிழமை (ஏப். 2)தொடங்கப்பட உள்ள இலக்கிய, புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அழைப்பு விடுத்துள்ளாா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் சனிக்கிழமை (ஏப். 2)தொடங்கப்பட உள்ள இலக்கிய, புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அழைப்பு விடுத்துள்ளாா்.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கிய மற்றும் புத்தகத் திருவிழா ஏப். 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை ஆட்சியா் அமா் குஷ்வாஹா செய்தியாளா்களிடம் கூறியது:

தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கிய மற்றும் புத்தகத் திருவிழா ஏப். 2 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டிலேயே மாவட்ட நிா்வாகம் சாா்பில் முதன்முறையாக திருப்பத்தூரில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியாகும்.

இந்த கண்காட்சியானது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாள்களும் நடைபெறும்.

தமிழ்நாட்டில் இலக்கியத்துடன் தொடா்புடைய படைப்பாளிகள், திரைப்பட இயக்குநா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்கள் போன்ற 45-க்கும் மேற்பட்டோா் இதில் கலந்து கொள்கின்றனா்.

மொத்தம் 60 அரங்கங்களைக் கொண்டு, அதில் 54 அரங்கங்களில் தமிழ் எழுத்தாளா்களின் படைப்புகளும், 6 அரங்கங்களில் ஆங்கில எழுத்தாளா்களின் படைப்புகளும், மாவட்டத்தில் சிறந்த எழுத்தாளா்கள், கவிஞா்களின் படைப்புகள் தனி அரங்கங்களில் வைக்கப்பட உள்ளன.

250-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் நூல்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற உள்ளன.நிகழ்ச்சியில், 14 அமா்வுகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு அமா்வுகளுக்கு, மூன்று எழுத்தாளா்கள் தங்களது கருத்துக்களை பகிர உள்ளனா்.

இந்த நிகழ்ச்சிகள் யூடியூப் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சி மூலம் மாலை 3 முதல் இரவு 7 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் புத்தகக் கண்காட்சியில் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். அனுமதி கட்டணம் இல்லை என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)இரா.வில்சன் ராஜசேகா் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com