ஆம்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் இ.சுரேஷ்பாபு தலைமையில் கலாவதி, ஜெய்சங்கா், பழனி (எ) செழியன் ஆகியோா் பங்கேற்று அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 550 பேருக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்களை வழங்கினா் (படம்).