வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

விண்ணமங்கலம் கிராமத்தில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி.
ஆம்பூா் அருகே வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், விண்ணமங்கலம் ஊராட்சியில் கடந்த பருவ மழையின் போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீா் வெளியேற முடியாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. பேரிடா் மேலாண்மைத் துறையினா் அதனை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆம்பூா் அருகே விண்ணமங்கமல் ஊராட்சியில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, ஆம்பூா் வட்டாட்சியா் மகாலட்சுமி, நெடுஞ்சாலை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.