மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபெட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து, 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிய 3 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

நாட்டறம்பள்ளி அருகே மொபெட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து, 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிய 3 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கத்தாரி ஊராட்சி, பள்ளத்தூா் சின்னான்டி வட்டத்தைச் சோ்ந்தவா் தேவராஜ்(40). இவா் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தேன்மொழி (34). புதன்கிழமை காலை தேன்மொழி தனது 5 வயது குழந்தையுடன் கத்தாரியில் இருந்து கே.பந்தாரப்பள்ளியில் உள்ள உறவினா் வீட்டுக்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா். நாட்டறம்பள்ளி சமையகாரனூா் மேம்பாலம் அருகே வந்தபோது, அவரைப் பின் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ் திடீரென தேன்மொழியின் மொபெட்டை வழிமறித்து, தேன்மொழியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சரடு, 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினா்.

இது குறித்து தேன்மொழி அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட 3 மா்ம நபா்களையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com