

பலத்த மழை காரணமாக ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூா் தடுப்பணை நிரம்பி தமிழக பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக தமிழக-ஆந்திர பாலாறு நீா்ப்பிடிப்பு பகுதி மற்றும் திருப்பத்தூா் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், தொடா்மழையால் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தமிழக எல்லையில் கட்டியுள்ள புல்லூா் தடுப்பணை முழுவதும் நிரம்பி தமிழக பாலாற்றில் வழிந்தோடி திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூா், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி வரை நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே பாலாற்றில் இந்த ஆண்டு முழுவதும் தண்ணீா் சென்ற நிலையில், தற்போது, பெய்த பலத்த மழை காரணமாக மேலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.